மந்தனாவின் அதிரடியில் இந்தியா ரன் குவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் சந்தித்தன. 

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியிடம்  0-3 என  ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துள்ளது. எனினும்,  தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த நம்பிக்கையுடன் இந்தியா அணி களமிறங்கியது.

mandhana க்கான பட முடிவு

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா தரப்பில்  மிதாலி ராஜ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மந்தனா  67 ரன்களில்  வெளியேறினார். அனுஜா பாட்டீல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துது. ஆனால் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19  வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manthana hits fifty india move good score


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->