ஆசிய போட்டியில் இருந்து முன்னணி வீரர் விலகல்! அணிக்கு மேலும் பின்னடைவு! - Seithipunal
Seithipunal


நாளை முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஒரு பிரிவாகவும், ஸ்ரீலங்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றொரு பிரிவாகவும் பிரிந்து விளையாடுகிறது. 

இந்த தொடரில் இந்தியா கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த  இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா முகுது வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 
அவர் போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த நிலையில் உடனடியாக இலங்கை திரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஷெஹன் ஜெயசூர்யா அணியில் இணைத்துள்ளார்.  ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரரான தினேஷ் சண்டிமல் கைவிரல் முறிவு காரணமாக இத்தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

English Summary

main player left in asia cup

செய்திகள்Seithipunal