சொல்லி வைத்ததை போல இப்படி நடக்குமா..? துள்ளி எழுந்த இந்திய வீரர்கள்.. விறு விறு பற பற என்று பறக்கும் ஆட்டம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல் டெஸ்டில் இந்திய அணி படு தோல்வியை தழுவியது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளான நேற்று டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஷிகர் தவான், சஹா மற்றும் புவனேஷ்குமாருக்கு பதிலாக பர்தீவ் படேல், கேஎல் ராகுல் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர்.

முதலில் வீசப்பட்ட 121 பந்துகளில் 102 பந்துகள் ரன்கள் எதுவும் எடுக்காமல் பந்தை தின்றே சலித்தனர். அந்த 121 பந்துகளில்  வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர்.

அதன் பிறகு அபாரமாக ஆடிய மெர்கரம் 94 ரன்கள் விளாச அடுத்து களமிறங்கிய ஆம்லா 82 ரன்கள் விளாசினார்.

இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்தனர். இதற்கிடையே முதல் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டூ பிளசிஸ் 24 ரன்களுடனும் மற்றும் மகராஜ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய வீரர்கள் துவக்கத்தில் துவண்டாலும் , கடைசி கட்டத்தில் துள்ளி எழுந்தனர். துடிப்பாக செயல்பட்ட பாண்ட்யா, ஆம்லாவை ரன் அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LIVE Cricket Score, India vs South Africa, 2nd Test, Day 1 at Centurion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->