தனக்காக விட்டுக்கொடுத்த தோனியிடமே அரசியல் செய்யும் கோலி : கொந்தளிக்கும் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 5-1 என்று இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் முதல் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

அதோடுமட்டுமல்லாமல் சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவை ஒரே தொடரில் 5 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய பெருமையை ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பகிர்கிறது.

இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடினார் கோலி. அது போலவே சாஹல் மற்றும் குல்தீப் ஆகியா இருவருமே பவுலிங்கில் மிரட்டினர். 

இந்த தொடரில் மட்டுமே கோலி 558 ரன்கள் குவித்து ஒரே தொடரில் அதிகமான ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இத்தகைய சாதனையையே குவித்த கோலி, கடைசி ஒருநாள் போட்டியில் தோனியை நான்காவது இடத்தில் களமிறக்காதது தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருநாள் போட்டியில் 9967 ரன்களை குவித்துள்ளார் வீரர் தோனி. தற்போது 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை தோனி எட்டுவதற்கு, இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவை.

எனவே இந்த மைல்கல்லை தோனி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலேயே எட்டிவிடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

இதனால் நேற்றைய போட்டியின் போது 4-வது வீரராக தோனி களமிறக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போலவே நான்காவது இடத்தில் ரஹானேவையே இறக்கினார் கோலி.

கோலி, ரஹானே ஆகிய இருவருமே இலக்கை எட்டி வெற்றி பெற்றுவிட்டதால், தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் 10000 ரன்களுக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

கோலியின் இத்தகைய செயலால் தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமால் கிரிக்கெட் ரசிகர்களே மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். கோலிக்காக தன்னுடைய டாப் ஆர்டர் இடத்தை விட்டுக் கொடுத்தவர் தோனி. ஆனால் தற்போதோ தோனியிடமே அரசியல் செய்கிறார் கோலி என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை, இதுவரையிலும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மட்டுமே ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை கடந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி தான் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kohli insult dhoni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->