3 வினாடி இடைவெளியில், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!  - Seithipunal
Seithipunal


2020 ஆம்  ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தடகள போட்டிகளின் சார்பாக முதல் இந்திய வீரராக தகுதி பெற்றுள்ளார் கே.டி.இர்பான்.

ஆசிய நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் நோமி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் கே.டி.இர்பான் 20 கிலோ மீட்டர் நடை பந்தய போட்டியில் கலந்து கொண்டார். அவர் போட்டியின் முடிவில் 4-வது இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை கடப்பதற்கு, 1 மணி நேரம் 20 நிமிடங்கள் 57 வினாடிகளே எடுத்துக்கொண்டார். ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறுவதற்கு தகுதி இலக்காக 1 மணி நேரம் 21 நிமிடங்களே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து 29 வயதான கே.டி.இர்பான், அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில்  நடைபெறும்  ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஜனவரி 1-ம் தேதி  முதல் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நடை பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான காலக்கட்டம் தொடங்கியது. இந்த காலவரையறை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி முடிவடைகிறது. 

ஆனால் தடகளத்தில் உள்ள மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான காலக்கட்டம் வரும் மே 1-ம் தேதி முதல் தான் ஆரம்பம் ஆகிறது.  இந்த கால வரையறை அடுத்த ஆண்டு ஜூன் 29 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KD IRFAN QUALIFIED FOR 2020 OLYMPIC GAMES


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->