முதல் நாளே மாஸ் காட்டப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ்! வெளியான அட்டவணை.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2019 சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிட்டு உள்ளனர். அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளது. 

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது போல இந்த ஆண்டும் வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl first match for Chennai vs bangalore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->