நடந்தது ஒரு போட்டி..!  படைத்ததோ பல்வேறு சாதனைகள்..!! தொடரும் தோனியின் சாதனை பட்டியல்..!!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின், 11வது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. ஆரம்பதில் சிறிது தடுமாறினாலும், வெற்றிக்கு கடைசி 3 ஒவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 45 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியில் தோனி பல சாதனைகளை படைத்தார் அதில்,

* ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை [216 விக்கெட்டுகள்] வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

* ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் [144 கேட்ச்சுகளுடன்] பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 

* தோனி இதுவரை ஆடிய 173 ஐபிஎல் போட்டிகளில், 157 போட்டிகள் பேட்டிங் செய்துள்ளார். இதில், 2888 பந்துகளில் 4007 ரன்கள் எடுத்துள்ளார். [20 அரைசதங்கள், 274 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்ஸர்கள் அடங்கும்]

* ஐபிஎல்-லில் 4000 ரன்களை கடந்துள்ளார் தோனி. 4000 ரன்களை எட்டும் 7வது வீரர் தோனி ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl csk ms dhoni new 3 records


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->