ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!! வெளியானது அதிரகாரபூர்வ அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை காரணமாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடாமல் இருக்கின்றது.

சமீபத்தில் புல்வாமா தாக்குதல் நடந்து இந்திய வீரர்கள் பலர் அதில் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட எதிர்ப்புகள் கிளம்பியது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் இரண்டு நாடுகளும் புகார் அளித்து வருகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற டி 20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பிக்க இருக்கிறது.

உலகெங்கும் இந்த போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் நடைபெற்றாலும் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த அணிகளில் இடம் பெறுவது வழக்கம்.

நாளை ஐபிஎல் போட்டிக்கான துவக்கம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றது.

ஆனால், பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்,"பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு, இந்திய வீரர்கள் தான் காரணம் அவர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடி கிரிக்கெட்டை அரசியல் ஆகிவிட்டனர். இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றது.

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 போட்டிகளில் இந்தியா ஒளிபரப்புவதில்லை. இதனால்தான் பாகிஸ்தானும் இந்த முடிவை எடுத்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl cricket match telecast banned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->