2019 ஐபில் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள்!! அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் அணிகள் யார்?? - Seithipunal
Seithipunal



ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.  35 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், முன்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. டெல்லி, மும்பை அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி மூண்டர்வது இடத்திற்கும் சென்றுள்ளது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும், சன்ரைஸ்ஸ் கைதராபாத் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் நல்ல பார்மில் இருந்த கொல்கத்தா அணி தொடர் தோல்விகளால் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றியடைந்து 7 வது இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றியடைந்து 8 வது இடத்தில் உள்ளது விராட் தலைமையிலான பெங்களூரு அணி.

புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் அணைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2019 ranking


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->