ஈரக்குலை நடுங்க விட்ட சென்னை வீரர்.. எதிரணிக்கு சிம்ம சொப்பனானது எப்படி..? எல்லாத்துக்கும் காரணம் அவரே தான்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கரண் சர்மா சூப்பர் மேன் போல் பறந்து சிக்சரை தடுத்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹைதராபாதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.

இதில் ஆட்டம் கடைசி பந்து வரை வந்து ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியது. இறுதி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

போட்டியின் போது ஷார்துல் தாகூர் வீசிய பந்தை ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், கரண் சர்மா பக்கம் தூக்கி அடித்தார். பந்து எல்லைக்கோட்டை தாண்டியபோது கரண் சர்மா, சூப்பர் மேன் போல் தாவி சிக்சருக்கு சென்ற பந்தை தடுத்தார்.

இதன்மூலம் சென்னை அணிக்காக 5 ரன்களை தடுத்தார். இது சென்னை அணிக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதராபாதுக்கு இது 2 ஆவது தோல்வியாகும்.

இதுவரை சென்னை அணி விளையாண்ட போட்டிகளில் எல்லாமே கடைசி வரை ஒரு முடிவு தெரியாமல், இறுதி வரை இரசிகர்களுக்கு இதய துடிப்பை அதிகரித்து கொண்டு செல்லும் அளவுக்கு திரில்லிங்காக முடிந்துள்ளது.

அதுவும் ஒரு மேட்சில் இறுதி பந்தில் சிக்ஸ் அடித்தால் தான் வெற்றி என்று உச்ச கட்ட நிலைக்கு எல்லாம் சென்றது

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl-2018-srh-vs-csk-karn-sharma-becomes-superman-to-stop-high-flying-six


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->