கனவை நிறைவேற்றிய கோஹ்லி...மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத இந்திய அறிமுக வீரர் முகமது சிராஜ்! - Seithipunal
Seithipunal


ராஜ்கோட்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வென்று 1-1 என தொடரில் சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் புதிதாக முகமது சிராஜ் என்ற வீரர் அறிமுகம் செய்யப்பட்டார். பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யக்கூடிய இவர் நெஹ்ராவின் இடத்தை நேற்று நிரம்பினார்.நேற்று சர்வதேச போட்டிகளில் முதல்முறையாக   அறிமுகம் ஆன முகமது சிராஜ் களத்தில் இருக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார்.

ஆட்டோ ஓட்டுநர் மகன்

தெலுங்கானா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் நேர்த்தியாக பந்து வீசக் கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில்  அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஹைதராபாத், சன் ரைசர்ஸ் அணிக்காக 2.6 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டார். வலது கை பந்து வீச்சாளரான இவர் சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன் என்பதும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய கீதத்தில் அழுதார்

இந்த நிலையில், நேற்று முதன் முறையாக சர்வதேசப்போட்டியில் அறிமுகமான இவர், இந்திய அணிக்காக விளையாடினார். வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ராவின் இடத்தை நிரப்பிய இவர், நேற்று அவர் களத்தில் நீல நிற ஆடையுடன் இறங்கிய போதே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தார்.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன் அணி வீரர்கள் வரிசையாக இந்திய தேசிய கீதத்திற்கு நிற்கும் போது அவர் மிகவும் உணர்ச்சி நிலையில் இருந்தார். தேசிய கீதம் ஆரம்பித்தவுடன் அவர் அழத் தொடங்கிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் இணையம் முழுக்க பரவி வருகிறது.

இவர்,தேசிய கீதத்திற்காக அழுதது தற்போது வைரல் ஆகி இருக்கிறது. மேலும் அவர் எந்த அளவுக்கு இந்தியாவையும், இந்திய அணியையும் மதித்தால் இப்படி அழுது இருப்பார் என நெட்டிசன்ஸ் பேசி வருகின்றனர்.

அணியில் தொடர்வாரா

இந்த நிலையில்,இந்திய அணிக்காக  நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமது முதல் போட்டியிலேயே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸின் விக்கெட்டை எடுத்து இருந்தாலும் இவர் மிகவும் அதிகமாக ரன் கொடுத்தார்.

நேற்று நடந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசிய  இவர் மொத்தம் 53 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 13.25 ரன்கள் இவர் கொடுத்து இருக்கிறார். இவரின் இந்த மோசமான ஆட்டத்தால் அடுத்த போட்டியில் இவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Introductory player muhammed siraj cried debut match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->