கோலியைச் சமாளிக்க ஓய்வு பெற்ற வீரரை களத்தில் இறக்கும் இங்கிலாந்து..! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மாதத்தில், சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தான் அடில் ரஷித் கடைசியாக விளையாடினார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம்,முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட போவதாகவும் அறிவித்து இருந்தார். 

ஆனால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடில் ரஷித் தன்னுடைய ஓய்வு முடிவை மாற்றவேண்டிய நிலையில் உள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ரஷித் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக   இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் தெரிவித்ததாவது:-  

ஒருநாள் கிரிக்கெட்டில் அடில் ரஷித் சிறப்பாகப் பந்து வீசினர். இதையடுத்தது அவர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா?  என்பது குறித்து தேர்வு குழு தான் முடிவு செய்யும். மேலும் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுவது குறித்து ரஷித் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து அடில் ரஷித் கூறியதாவது: தற்போது நான்  ஒருநாள் மற்றும்  டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறேன். தேர்வுக்குழுவினர் என்மீது நம்பிக்கை வைத்து, இங்கிலாந்து அணி டெஸ்ட் அணிக்கு என்னைத் தேர்வு செய்தால் என் ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ingland Cricket Retired Cricker Test Serious For Opposite Indian Team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->