ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கபட்டது! தூக்கி எறியப்பட்ட முக்கிய வீரர்! என்ட்ரி ஆன பாண்ட்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் முடிந்த நிலையில், இந்திய அணி இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இந்த 20 ஓவர் போட்டிகள் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வுக்கான கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.  எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்தது.

இந்த தொடரில் உலககோப்பைக்கு தயாராகும் விதமாக ரிசர்வ் வீரர்களின் திறமையினை சோதிக்க வாய்ப்பு இருப்பதாக கருதபட்டது. அதன் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், ரஹானே, பாண்ட் உள்ளிட்டோரை பரிசோதிக்க வாய்ப்பு இருப்பதாக கருதபட்ட நிலையில் ரஹானே அணியில் இடம்பெறவே இல்லை. ஆனால் ராகுல், பாண்ட் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ராகுல் ஏற்கனவே அணியில் இருந்த நிலையில் யாருடைய இடத்தில் பாண்ட் வந்தார் தெரியுமா? தினேஷ் கார்த்திக்கின் இடத்தில் தான். நியூசிலாந்து சுற்றுபயணத்தில் பாதியில் ஓய்வுக்கு சென்ற கேப்டன் வீராட்கோலி, அதற்கு முன்னரே ஓய்வளிக்கப்ட்ட பும்ரா அணிக்குள் திரும்பி உள்ளனர். புவனேஸ்வருக்கு ஓய்வளிக்கப்ட்டுள்ளது. அவருக்கு பதில் முதல் இரு போட்டிகளுக்கு மட்டுமே சித்தார்த் கவுல் இனைகப்ட்டுள்ளார். 

முதல் இரு ஒருநாள் போட்டிக்கான அணி : விராட் கோலி, ரோஹித், KL ராகுல், ஷிகர்  தவான், ரிஷப் பாண்ட்,  MS டோனி (WK), ஹர்டிக்  பாண்டியா, விஜய்  ஷங்கர் , யுஸ்வென்ற  சாஹல், ஜஸ்பிரிட்  பும்ராஹ்,  அம்படி ராயுடு, கேதார் ஜாதவ், முஹம்மத்  ஷமி, குலதீப்  யாதவ், சித்தார்த் கவுல். 

கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி : விராட் கோலி, ரோஹித், KL ராகுல், ஷிகர்  தவான், ரிஷப் பாண்ட்,  MS டோனி (WK), ஹர்டிக்  பாண்டியா, விஜய்  ஷங்கர் , யுஸ்வென்ற  சாஹல், ஜஸ்பிரிட்  பும்ராஹ்,  அம்படி ராயுடு, கேதார் ஜாதவ், முஹம்மத்  ஷமி, குலதீப்  யாதவ், புவனேஸ்வர் குமார். 

கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியே இந்திய அணியின் உலககோப்பை அணியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 


 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team for australia odi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->