உலககோப்பைக்கான இந்திய கிரிகெட் அணி அறிவிப்பு!  யாருக்கெல்லாம் வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் காய்ச்சலானது பயங்கரமாக அடித்து வருகிறது. கூடவே ஐபிஎல் கிரிக்கெட் காய்ச்சலும் பலமாக அடிக்கிறது. இந்நிலையில் தேர்தல் மற்றும் ஐபிஎல் முடிந்த வேகத்தில் மக்களை தொடர்ந்து பிசியாக வைக்கும் விதமாக வர இருப்பது தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. 

வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இறுதியாக இந்தியாவில் விளையாடிய ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி இழந்து இருந்தது. அப்பொழுது தொடருக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக கோப்பைக்கான அணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் மூன்றாவது ஆட்டக்காரராக கேப்டன் விராட் கோலியும் ஐந்தாவது ஆட்டக்காரராக அணியின் மூத்த வீரர் தோனியும் 6ஆவது வீரராக கேதர் ஜாதவ் 7 ஆவது வீரராக ஹாட்ரிக் பாண்டியா, 8 ஆவது வீரராக ஒன்பதாவது சாகல், 9 ஆவது வீரராக குலதீப் யாதவ், 10 ஆவது வீரராக புவனேஸ்வர் குமார் பதினோராவது வீரராக ஜஸ்பிரிட்  பும்ராஹ்  இடம் பெறுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 

நான்காவது இடத்திற்கான போட்டி தான் பலமாக இருக்கிறது. இந்த இடத்தில் ஏறக்குறைய 12 வீரர்கள் பரிசோதித்த இந்திய அணிக்கு ஒரு வீரர்கள் கூட அதற்கு சரியாக தேர்வாகாமல் கடைசிவரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றனர். இறுதியாக ஓரளவு நம்பிக்கை வைத்த அம்பத்தி ராயுடு தற்போது ஐபிஎல் தொடரில் சொதப்பியிருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான், இருந்தாலும் அந்த இடத்திற்கு அண்மைக்காலங்களில் அற்புதமாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் ஐபிஎல் தொடரில் ரன்களை குவித்து வருவதால்  ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்படுவார்கள் என கருதப்பட்ட கார்த்திக், ரிஷப் பாண்ட்  இருவரும் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஏனெனில் கேஎல் ராகுல், அம்பத்தி ராயுடு ஆகியோர் இணைக்கபடும்போது, ஏற்கனவே 11 பேர் உறுதியாகிவிட்ட நிலையில் இந்த இருவரோடு 13 பேர் வந்துவிடுகிறது. இதில் மாற்று விக்கெட் கீப்பராக அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்கள் அனைவரும் கீப்பிங் செய்தவர்கள் தான் என்பதால் அதற்கு மாற்றாக கார்த்திக், ரிஷப் பாண்ட் தேவைப்பட மாட்டார்கள் என தெரிகிறது. ஒருவேளை பேட்டிங்கை சாதகமாக வைத்து கணக்கு பண்ணி பார்த்தால் ரிஷப் பாண்ட் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அம்பத்தி ராயுடுவை கழட்டிவிட்டுவிட்டு ரிஷப் பாண்ட் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. 

அதற்கடுத்தபடியாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே உறுதியாகிவிட்ட  நிலையில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நிச்சயம் எடுப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி இடம் பெறுவார் என்பது உறுதியாகிறது. ஏற்கனவே வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஹாட்ரிக் பாண்டியா மற்றும் விஜய்சங்கர் இருப்பதால் ஆடும் லெவன் அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை இருக்காது என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது. அதனால் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில்  இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன் மூலம் விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா என்ற மூன்று ஆல்ரவுண்டர்கள், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா  என்ற மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்களும், சாஹல், குல்திப் ஆகிய இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்களும், பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, எம்எஸ் தோனி, கேதர் ஜாதவ், லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு இடம் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு,  தினேஷ் கார்த்திக், ரிஷப் பாண்ட் இவர்களில் மட்டுமே மாற்றமாக இருக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேருமே பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்கள் எனபது குறிப்பிடத்தக்கது. 

எதிர்பார்க்கப்படும்  உத்தேச அணி : கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் எம் எஸ் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team expected squad for icc worldcup 2019


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->