இந்திய வீரர்கள் அசத்தல் சாதனை: நீ பந்துவீச்சுல சாதனையா!! இதோ நா பேட்டிங்ல!.. போட்டிக்கு போட்டி! - Seithipunal
Seithipunal



இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி தடுமாறி வந்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, துவக்க மட்டையாளர்களை அடுத்தடுத்து போல்டாக்கி வீழ்த்தினார். இதன் மூலம் முகமது சமி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது ஷமி. 

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கனே வில்லியம்சன் 64 ரன்களும், ரோஸ் டெய்லர் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஏந்திய அணியின் துவக்க மட்டையாளர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பாக ஆடிவருகின்றனர். இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் குறைந்த ஆட்டத்தில் 5000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 10 ஓவர்களுக்கு 44 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்து ஆடிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian players new record in oneday match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->