20 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் உலக சாதனை! - Seithipunal
Seithipunal


உள்ளூர் டி20 தொடர் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மோஹூன் பாகன் அணியும், பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் அணி, 7 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

அந்த அணியின் தொடக்க வீரரான விரித்திமான் சாஹா, 20 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 14 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அவர் சந்தித்த 20 பந்தில் 18  பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார்.

7-வது ஓவரில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை சாஹா விளாசினார். இது பிரபலமான போட்டி இல்லை என்பதால் இது சாதனையாக கருத்தப்படுமா என்பது தெரியவில்லை ஆனால் சர்வதேச போட்டிகளில் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருக்கிறது. ஐபிஎல்லில் 30 பந்துகளில் கெய்ல் சதமடித்ததே உலக சாதனையாக உள்ளது. ஆனால் சஹா 20 பந்துகளில் சதமடித்தது உலக அளவில் சாதனையாகவே இருக்க கூடும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian player hit century in 20 balls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->