2019 உலகக்கோப்பை! இந்திய போட்டிகள் மாற்றம்! காரணமென்ன?! ஜூன் 16ல் பாகிஸ்தானுடன் மோதல்! - Seithipunal
Seithipunal


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்க உள்ளது.  அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள் வர உள்ளது. இதற்கு காரணம் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் என கூறப்படுகிறது. 

Image result for icc world cup 2019

பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி, ஐபிஎல் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. அடுத்த சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல் மே 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் போதிய இடைவெளி இல்லாத காரணத்தால்  இந்தியா விளையாடும் ஆட்டத்தின் தேதி மாறுகிறது.

Image result for vivo ipl

உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவுடன் மோத இருந்தது. அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி  நடைபெற வேண்டிய ஆட்டம்  ஜூன் 5ம் தேதிக்கு மாற்றப்படுகிறது.  ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இந்த மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகக் கோப்பை போட்டிக்கான கால அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian matches date changed in ICC WC2019


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->