மீண்டும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா.. மகிழ்ச்சியில் ராகுல் டிராவிட்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டி நாளை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை போட்டி தொடங்க உள்ளதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா 3 வரையிலான கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரர். ஒவ்வொரு வீரரும் எல்லாம் ஆட்டங்களின் அணி தேர்வுக்கு தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் முழு உடல் தகுதியுடன், புத்துணர்வுடன் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். 

இதனால் அவர் உட்பட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய மிகவும் திருப்தி அளிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அற்புதமான ஒரு வீரர். வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஒரு வீரர். ஐபிஎல் போட்டியில் தான் நல்ல பார்மில் இருப்பதை காட்டினார். அவரது கேப்டன்சி என்னை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் நன்றாகவும் செயல்படுகிறார். எங்களை பொறுத்தவரை அவர் மீண்டும் பந்துவீச தொடங்கியிருப்பது நேர்மறையான விஷயம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அவரது மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian coach dravid press meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->