இன்னைக்கு இப்படியெல்லாம் நடந்துருச்சா..?! ஆஸ்திரேலியாவின் அடிமடியில் கைவைத்த கோலி..!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

மும்பையில் வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (20), தவான் (9) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 280 ரன்கள் சேர்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 121 ரன்கள் எடுத்தார். இது அவரது  200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது

இதன்மூலம் பாண்டிங்கின் சாதனை கடந்த கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

மேலும் 200-வது போட்டியில் சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்..

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs New Zealand, 1st ODI - Virat Kohli played the sheet anchor's role to perfection as his 31st century helped India reach a challenging total of 280 for 8 on a pitch that was two paced at times.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->