நேத்து சும்மா சொன்னாங்கனு நெனச்சுடீங்களா..? இன்னைக்கு என்ன செஞ்சுட்டாங்க பாத்தீங்களா..!! - Seithipunal
Seithipunal


ஆசியக்கோப்பை ஹாக்கியில் நேற்று பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இன்று இறுதிப்போட்டியில்  மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை 3-வது முறையாக கைப்பற்றியது இந்திய அணி.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மலேசிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற 10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா, மற்றொரு ஆட்டத்தை சமன் செய்துள்ளது.

இதுவரை இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய ஆடிய ஆட்டங்களில் அனைத்து அணிகளுக்கும் எதிராக வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி, அதே நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் இன்று களம் கண்டது.

இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இன்றைய ஆட்டமானது உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கும் என்பதால், இந்திய அணி கவனமுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டாலும் தனது திறமையை சரியான விதத்தில் வெளிக்காட்டியது.

எத்தனையோ பத்து வருடங்களுக்கு ஒரு முறை உலக கோப்பை வாங்கும் கிரிக்கெட்டை நினைச்சு ஏங்கும் இந்திய ஜனங்க.

எப்போதும் கப் வாங்கும் ஹாக்கியை வீரர்களை கண்டுகொள்வதே இல்லை. ஊக்குவிக்காத எந்த துறையும் முன்னேறுவதில்லை. இந்தியாவின் பல திறமைகள் தோற்கடிக்கப்படுவது இதனால்தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India defeated Malaysia 2-1 in the final of the Asia Cup hockey in Dhaka today. This is India’s third Asia Cup title after winning the continental event in 2003 and 2007 too. Get highlights of India vs Malaysia, Asia Cup hockey final, here.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->