வரும் உலக கோப்பையில் ஆடும் வீரர்களுடன், ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்ளும் இந்திய அணி! - Seithipunal
Seithipunal



கடந்த ஆண்டு இறுதியில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற  இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விளையாடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் நாளை பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த தொடர் தான் இந்திய அணி அடுத்த உலககோப்பைக்கு முன் ஆடும் கடைசி சர்வதேசப் போட்டி ஆகும். இந்த தொடர் முடிந்த பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு நேரடியாக உலகக்கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி. 

இதனால் இந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பைத் தொடரிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையும் காட்ட  சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்காக விளையாடும் வீரர்கள்:

இந்திய அணி :
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, குர்னல் பாண்டியா, விஜய் சங்கர், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்கண்டே

 ஆஸ்திரேலிய அணி :
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டி ஆர்கே ஷார்ட், பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் காரே, ஜேஸன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நீல், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சார்ட்ஸன், கானே ரிச்சார்ட்ஸன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஸ்டன் டர்னர், ஆடம் ஜம்ப
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs austrelia match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->