பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து விராட் கோலி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலம், புல்வாமா வட்டத்தில் கடந்த 14-ம் தேதி இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். 

இது தொடர்பாக இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியவை, ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக்கில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16-ந்தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் உள்ளது என்று கூறினார்.

ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் வந்து நாம் விளையாடாவிட்டால் இந்தியா உலக கோப்பையை இழக்க நேரிடும் என்று கூறினார். 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு விராட் கோலி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து நாடு மற்றும் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி இந்திய அணி செயல்படும் என்று விராட் கோலி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india pakistan match in virat kohli speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->