சோகத்தில் கிடந்த இந்திய ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்த இரண்டு இந்திய வீரர்கள்! இறுதியில் நேர்ந்த சோகம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்று அசத்தியது. அதன் பிறகு ஐந்து ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இந்த தொடரை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்று சொதப்பியது. அந்த அணியின் உஷ்மான் கவாஜா சதம்  அடித்தார். பீட்டர் ஹண்ட்ஸ்காம்ப் அரை சதம் அடித்து இவர்களின்  சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272  ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து  273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறியது. கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து விளாசிய ஷிகர் தவான், 12 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார், ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். 

அதனையடுத்து விராட் கோலி 20 ரன்கள் , பாண்ட் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினர். இதனையடுத்து இந்திய அணி சொற்ப ரன்களில்ஆட்டம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக  கேதார் ஜாதவ், புவனேஷ்குமாருடன் இணைந்து அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கேதார் ஜாதவ் 57 பந்துகளுக்கு 44 ரன்களும், புவனேஷ்குமார் 54 பந்துகளுக்கு 46 ரன்களும் எடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். இறுதியில் இந்திய அணி  அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india loss one day series


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->