இந்தியா வெற்றிகரமான தோல்வி! கைகொடுத்த டோனி, கடைசிவரை போராடிய ரோஹித்! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று சிட்னியில் நடைபெற்றது. முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 289 ரன்கள் என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், கேரே ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஷ்குமார் ஓவரில் கிளீன் போல்டாகி அவுட்டானார். கேரே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கவாஜா 81 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார்.  மார்ஷ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கம்ப் 73 ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலியா  50 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தனர். ஸ்டோனிஸ் 47 ரன்களிலும், மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே தவான் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த இந்திய கேப்டன் கோலி 3 ரன்கள், அம்பதி ராயுடு டக் அவுட் என  வெளியேறினார்கள். 4 ஓவரில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்த நிலையில் ரோஹித் சர்மா, தோனி களத்தில் இருந்தனர். 

அதன்பிறகு நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி அவ்வப்போது சிக்ஸர்களை பறக்கவிட்டு குஷி படுத்தியது. சிறப்பாக விளையாடிய ரோஹித் டோனி ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 137 ரன்களை சேர்த்த நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பால் 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா சதம் விளாசினார். 

அவர் 129 பந்துகளில் 133 ரன்களை 10 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 254 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. புவனேஷ்குமார் இறுதிவரை களத்தில் 29 ரன்களுடன் நின்றார். தத்தளித்த இந்திய அணியினை வெற்றிகரமான தோல்விக்கு கொண்டு வந்து விட்ட பெருமை ரோஹித், டோனி கூட்டணியை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india lose to australia in 1ST ODI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->