வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணி! அணியில் மாற்றத்துடன்? இன்னும் சற்று நேரத்தில்!  - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் இன்று அணியுடன் இணைந்து உள்ளார். இருப்பினும் இரண்டாவது போட்டியில் களம் இறங்குவாரா என்பது போட்டிக்கு முன்பு தான் தெரியவரும். முதல் போட்டியில் சொதப்பிய ராகுல், கார்த்திக் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு சங்கர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் டெஸ்ட் தொடரில் அசத்திய முகமது ஷமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் ஆடும் லெவனில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆல்ரவுண்டருக்கான இடத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு விஜய்சங்கர் உள்ளே வரவும், ஷமிக்கு பதில்  சாகல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடுகள தன்மையை பொருத்து அணியானது தேர்வு செய்யப்படும்.

கடந்த போட்டியில் விக்கெட் வீழ்ச்சியை தொடர்ந்து ஆட்டத்தை இந்திய பக்கம் திருப்ப மிகவும் மந்தமாக ஆடிய முன்னாள் கேப்டன் தோனியின் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளது. அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இன்று ஆட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ஏனெனில் ரிஷப் பாண்ட் சிறப்பாக கொண்டிருப்பதால் உலக கோப்பை அணியில் அவருக்கு இடம் உண்டு என தேர்வு குழு தலைவர் கூறியிருப்பதாலும் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தோனி உள்ளார். 

பரபரப்பான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு ஆஸ்திரேலியாவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் இது இந்திய அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Australia 2nd ODI in Adelaide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->