இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டி திடீரென ரத்து! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், டி20 தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் தடைபட்ட ஆட்டம், டக்ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20  போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் ஓவரிலியே முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர் அடுக்கடுக்காக ஒவ்வொரு விக்கெட்டுகளை இழந்து 7 வது ஓவரில் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த மேக்ஸ்வெல் உடனே குர்னால் பவுலிங்கில் அவுட் ஆனார். அவருக்கு பிறகு வந்த ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகி வெளியேறினர். 19வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்ட நிலையில்  பின்னர் போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய  அதிகபட்சமாக வேகபந்து வீச்சாளர் பென் மெக்டர்மோட்ட் 32 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸ் முடிந்து இரண்டாவது விளையாட இருந்த இந்திய அணி, தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்து மழை கொண்டே இருந்ததால் இரண்டாவது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதனால் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India - Australia cancel the second T20 tournament suddenly!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->