முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிவாகை சூடிய இந்தியா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது. 

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது 104.5 ஓவர்களில் முடிவில் 300 ரன்கள் எடுத்து தனது வீரர்களை இழந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டார்க் 55 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து விக்கெட் ஆகாமல் இருந்தார். இந்தியாவின் தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். 

அனைத்து விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியாவிற்கு பாலோ-ஆன் வழங்கப்பட்டதன் காரணமாக முதல் சுற்றை நிறைவுபெற்று., தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆஸ்திரேலிய அணியானது தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியானது 4 ஓவர்களில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில்., மழை மேகம் திரண்டதன் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும்., நேற்று முன்தினத்தின் படி 25.2 ஓவர்களுடன் போட்டியானது நிறுத்தப்பட்டது.  

நான்காம் நாளை தொடர்ந்து 5-வது நாளும் மழை பெய்ததால்., 5 வது நாளில் ஒரு பந்துகள் கூட வீசப்படும் போட்டியானது இரத்து செய்யப்பட்டது.. இதன் காரணமாக போட்டியானது டிராவில் நிறைவுபெற்றது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட போட்டிகளில் இந்தியாவானது 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

மேலும்., ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்., 1947 ம் வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்த இந்திய அணி தனது கனவை 71 வருடங்கள் கழித்து 12 வது முயற்சியில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் புஜாரா தேர்வு செய்யப்பட்டு., அவருக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus test match India won


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->