யாரு சாமி இவன்.!! ரணகளப்படுத்திய அந்த 6 விக்கெட்.!! ரத்த கண்ணீர் வடித்த ஆஸ்திரேலிய அணி.!!!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி இருவரும், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். ஆரோன் பின்ச் 5 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கும் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவருடன் கைகோர்த்த ஷான் மார்ஸ்ம் நிதானமாக ஆடினார். உஸ்மான் கவாஜா 34 ரன்களுக்கும், ஷான் மார்ஸ் 39 ரன்களுக்கும், யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மட்டும் நிலைத்து நின்று ஆடி 58 ரன்களை கடந்த போது, யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ் (10 ரன்), ஜெயி ரிச்சர்ட்சன் (16 ரன்), ஆடம் ஜம்பா (8 ரன்), யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு புடிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்து, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை   19  ஓவர்களில்,   2  விக்கெட் இழப்பிற்கு,   69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் டோனி 8 ரன்களுடனும், விராட் கோலி 29  ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus 3rd odi match now


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->