ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்தும் இந்திய அணிக்கு வந்த சோதனை: போட்டியின் போது இந்திய அணியின் மேனேஜர் செய்த விதி மீறிய செயல்..? - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய மேனேஜர் மொபைல் போன் பயன்படுத்தியதால் ஐஐசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் போட்டி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது நாளிலே இந்திய அணி ஆட்டத்தை முடித்து கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன்  ரகானே, கோப்பையை வாங்கி ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் கொடுத்து அழகு பார்த்தது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியது.

Image result for கிரிக்கெட் செய்திபுனல்

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு ஆச்சரிய சம்பவத்தை இந்திய அணி செய்திருக்கும் நிலையில், இந்திய அணியின் மேனேஜரின் செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்ரமணியம் செல் போன் உபயோகித்துள்ளார்.

அந்த போனை ஆடும் லெவனில் இல்லாத வீரர் ஒருவரிடம் ஏதோ காண்பித்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஐசிசி விதித்த தற்போதைய விதியின் படி, கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது வீரர்களின் அறையிலோ அல்லது மைதானத்திலோ டிஜிட்டல் வாட்ச், அல்லது மொபைல் போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்ற விதி உள்ளது.

இருப்பினும் இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்ரமணியம் வீரர்களின் அறையில் தனது செல் போனை உபயோகித்துள்ளதால், இது தொடர்பான காட்சியை கண்டவுடன் ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc warns indian cricket team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->