ஹைதராபாத் ஐபிஎல் அடுத்தடுத்த தோல்விகள்! முன்னணி வீரர்கள் 3 பேருக்கு காயம்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட்  11-வது சீசன் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வியடைந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஹைதரபாத் பின்னர் பஞ்சாப் சென்னை அணிகளிடம் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் லேசான வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இன்றைய போட்டியில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Image result for dawan bhuvi yusuf pathan

ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் காரமாக ரிட்டையர்டு ஹர்ட் ஆன தவான் இன்று விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உறுதியாகவில்லை. மேலும் ‘‘சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யூசுப் பதான் விளையாடுவாரா? என்று 100 சதவீதம் உறுதியாக கூற இயலாது.  இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hydrabad important players get injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->