இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர் - முன்னாள் வீரர் அதிரடி கருத்து!! - Seithipunal
Seithipunal


மகளிர் அணிகளுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் இதில் இந்தியா, அயலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி லீக் தொடரில் தனது முதல் போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர் கொண்டது. அப்போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், குறைந்த பந்துகளில் சதம் அடித்து விளாசினார்,  ஹா்மன் பிரீத் கவுா்.

இதனைத்தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை ௭ விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி துவம்சம் செய்தது. இதில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், அரை சதம் அடித்தார்.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அணியை துரத்தி அடித்தது. இதிலும் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ், அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.

பின்னர் மூன்று போட்டிகளில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணியை லீக் தொடரில் 4வது போட்டியில் எதிா்கொண்டு ஆடியது. அப்போட்டியிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதில் காயம் காரணமாக அனுபவ வீராங்கனை, மிதாலி ராஜ் விளையாடவில்லை.

இந்நிலையில், இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோலிவியடைந்தது. பின்னர் மிதாலி ராஜ் மேலாளர், அனிஷா குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் பற்றி கருது பதிவிட்டுள்ளார். அதில் "அவர் 
இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹா்மன் பிரீத் கவுா் சூழ்ச்சியுடன் நடந்து வருகிறார். அடிக்கடி பொய் கூறிவருகிறார். முதிர்ச்சி இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டன் பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்" என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He is not fit for captaincy of Indian team - former player of action!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->