வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! ரஞ்சியில் ஆக்ரோஷம்! ஆஸ்திரேலியாவில் குதுகலம்!  - Seithipunal
Seithipunal


இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டவாது போட்டி தற்போது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக எல்லாமும் அமைந்து விட தொடக்க வீரர்களான ராகுல், விஜயின் ஆட்டம் தான் மோசமாக உள்ளது. இந்த தொடருக்கு புதிய தொடக்க ஆட்டக்காரராக அழைத்து வரப்பட்ட பிரித்வி ஷா பீல்டிங் செய்யும் போது தவறி கீழே விழுந்தார் அதில் கணுக்காலில் காயம் அடைந்தார். ‘பாக்சிங் டே’  மெல்போர்ன் டெஸ்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான எஞ்சிய தொடரில் விளையாடுவதற்கு ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் இந்திய அணியுடன் இணைவார். அதேபோல அணியில் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். 

ஆசிய போட்டியில் விளையாடிய போது திடிரென கீழ விழுந்த ஹர்டிக் பாண்டியா தீவிர சிகிச்சைக்கு பின்னர் ரஞ்சி போட்டியில் ஆடினார். மும்பைக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக பாண்டியா களமிறங்கினார். முதல் இன்னிங்க்சில் பந்துவீசிய பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் அசத்திய பாண்டியா 73 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில்  ஹர்டிக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி 20  விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் பேட்டிங்கில் ஜொலிப்பவர் யாரும் இல்லாததால் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. இந்த இடத்தில் தான் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்திய அணியில் பேட்டிங் செய்யும் வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்குமார் இருந்தாலும் சுவிங் ஆகாத ஆடுகளங்களில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாண்டியாவின் வரவு புது தெம்பை கொடுக்கும். இந்த தொடரில் சிறப்பாக வீசி வரும் ஷமி, பும்ராவுடன் மூன்றாவது பந்து வீச்சாளராக பாண்டியா இணைவார். 

பெர்த் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் களமிறங்காததான் விளைவு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் லியோனின் ஆட்டத்தில் தெரிகிறது. பாண்டிய இருந்திருந்தால் ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணியில் இணைத்திருக்க முடியும். இதனால் பாண்டியா வரவு இந்திய அணிக்கு புதிய தெம்பை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya enter in indian squad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->