ஓய்வை அறிவித்தார் இந்திய அணியின் ஜென்டில்மேன்! இரண்டு உலகக்கோப்பையின் நாயகன்! ஜாம்பவானுக்கு வாழ்த்துகள்!  - Seithipunal
Seithipunal


கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஆவார்.  இவர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் உட்பட அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 

இடது கை பேட்ஸ்மேனான காம்பிர் அதிகப்படியான போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் புது தில்லி அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ரஞ்சி போட்டியில் அவர் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனில் ஆந்திராவிற்கு எதிரனே போட்டியே இறுதி போட்டி என அறிவித்துள்ளார். 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் முதல் மூன்று வருடங்கள் டெல்லி அணிக்காக ஆடிய அவர், 2011 முதல்  2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக விளையாடி வந்தார். ஆனால் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக ஆரம்ப போட்டிகளில் விளையாடிய அவர் தொடர் தோல்விகளால் அணியிலிருந்தே தன்னை விடுவித்துக்கொண்டார். 

2003 ஆம் ஆண்டில் வங்காளதேச அணிக்கு எதிராக ஒருநாள்போட்டிகளில் அறிமுகமானார். பின் 2004 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியஅணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  அறிமுகமானார். 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அணி தலைவராக இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 2007 ஐசிசி உலக இருபது 20  ஓவர் பைனல் ,2011 ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய இரு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் இவரின் பங்களிப்பு தான் அதிகம் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. 

2016 க்கு பிறகு அணியில் இடம் கிடைக்காமல் இருந்த காம்பிர் இன்று ஒய்வு பெற விரும்புவதாக அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gautam gambhir retire from all form of cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->