பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி ஃபார்ம் குறித்து யோசனை.! மீண்டும் தோனி பழைய ஃபார்மிற்கு வர இதை செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இந்த நிலையில், இந்த ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததுக்கு, இந்தியாவின் விக்கெட் கீப்பர் தோனி தான் என பலர் கருது தெரிவித்து வரும் நிலையில், இந்தியாயாவின் முன்னாள் தொடக்க மட்டை வீச்சாளர்களான கம்பிர் மற்றும் சேவாக் ஆகியோரும் தோனியின் பார்ம் குறித்து விமரிசித்தனர்.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 2 வது போட்டியில் தோனி 58 பந்துகளுக்கு 37 ரன்களும், 3 வது போட்டியில் 66 பந்துகளுக்கு 42 ரன்களும் மட்டுமே சேர்த்தார். அது மட்டுமில்லாமல், தோனி அதிக பந்துகளை வீணடித்தார்.

இந்நிலையில், தோனியின் விளையாட்டை பற்றி கங்குலி, தோனி ஒரு சிறந்த வீரர், அவரால் இப்போதும் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவரை ரசிகர்கள் ஏளனம் செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது. அவரைப்போல் ஒரு விக்கெட் கீப்பரையோ, பேட்ஸ்மேனையோ, இந்திய அணி மீண்டும் பெருமா என்பது தெரியாது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை ஊக்கப்படுத்தி, தோனியுடன் அமர்ந்து இது குறித்து பேசினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என கூறினார்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganguly adviced to bcci


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->