இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிரடி.! இந்திய அணியின் பந்து வீச்சு பலமாக உள்ளது.!! தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கே உள்ளது!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து  வீச்சாளர் புவனேஷ்வர் குமார், காயம் காரணமாக இடம் பெறாதது அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், இந்தியாவின் பவுலிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் நன்றாக வீசுகிறார். இஷாந்த் சர்மா, சீனியர் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமியும் நல்ல பார்மில் உள்ளார்கள்.

மேலும், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் முதல் மூன்று டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது. இந்த தொடர் நீண்ட நாட்கள் நடைபெறும் ஆகையால், அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former fast bowler zaheer khan talk about indian bowling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->