ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கிய பிரபல கால்பந்து வீரர்! ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த கால்பந்து வீரர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்து வந்தார். 

அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் ஊழியர்களிடம் நண்பர்களை போல பழகியுள்ளார். பிறகு ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த வெகுமதியால் ஓட்டல் ஊழியர்கள் சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அவர்கள் செய்த உபசரிப்பு எனக்கு மிகவும் படித்தது அதனால் தான் 16 லட்சம் வழங்கினேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous football player who gave rs 16 lakh tips for hotel server


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->