வாழ்வா சாவா ஆட்டத்தில் கொல்கத்தா! ஆறுதலை தேடும் பரிதாப ராஜஸ்தான்!  - Seithipunal
Seithipunal


தொடரிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்யுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி? ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றுவிட்ட நிலையில் இன்று அதனை உறுதி செய்யுமா? அல்லது போட்டித் தொடரில் நீடிக்க முடியுமா என்பது தெரிய வந்துவிடும். இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கும் மற்றொரு அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐந்து ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதியாக விளையாடிய ஐந்து போட்டியிலும் தோல்வியை கண்டு பரிதாபமான நிலையில் இருக்கிறது. 

ஆரம்ப கட்டத்தில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசெல் அசத்தல் ஆட்டத்தை ஆடி எளிதான வெற்றி என்பதனை விட எதிர்பாராத வெற்றியை எல்லாம் பெற்றது கொல்கத்தா. ஆனால் அதன்பிறகு அவருடைய ஆட்டம் ஆட்டம் காண சென்னை கொல்கத்தா அணியின் போட்டியிலிருந்து, கொல்கத்தா அணியின் சார்வு தொடங்கி தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. 10 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றது.  ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகம் நம்பி இருந்தது அந்த அணியின் வெளி நாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆச்சர் போன்றவர்களை தான். இவர்கள் மூவருமே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்து அணி முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளதால் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜோஸ் பட்லர் ஏற்கனவே அந்த நாட்டிற்கு பறந்து சென்று விட்டார்.

இன்றைய போட்டியோடு பென் ஸ்டோக்ஸ் சோப்ரா ஆச்சர் இருவரும் பறந்து விடுவார்கள். இதனால் அந்த அணியானது மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் இடத்தை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு வீரர்கள்  சரியான கலவையில் அவர்கள் அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அந்த அணியில் தற்போது ரகானே. சஞ்சு சாம்சன். ஸ்டீவன் ஸ்மித் சரியான அளவில் சிறப்பாக விளையாடி வந்தாலும் பந்துவீச்சில் குறிப்பிடத்தகுந்த அளவில் யாருமே சிறப்பாக ஜொலிக்காததால் அந்த அணி வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் ஆடிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 தோல்விகளுடன் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

இதனிடையே இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியின் சார்பில் கடந்த போட்டியில் ஆடிய  கரியப்பா வேகப்பந்துவீச்சாளர் குரனே இருவரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா மற்றும் கார்லஸ் பிராத்வெய்ட் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த மூன்று போட்டிகளிலும் கோல்டன்  டக்  ஆகி சாதனை புரிந்த அஷ்டோன் டர்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓஷனே தாமஸும் தவல் குல்கர்னி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி தொடரில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற எதிர்பார்ப்புதான் அனைவர் மத்தியிலும் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do or die match for kolkata knight riders against rajasthan royals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->