தோனியின் வெற்றி சாதனையும்..!! ரோஹித்தின் வேதனையான சாதனையும்..!!!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின், 11வது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியில் தோனி பல சாதனைகளை படைத்தார் அதில்,

* ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை [216 விக்கெட்டுகள்] வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

* ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் [144 கேட்ச்சுகளுடன்] பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 

* தோனி இதுவரை ஆடிய 173 ஐபிஎல் போட்டிகளில், 157 போட்டிகள் பேட்டிங் செய்துள்ளார். இதில், 2888 பந்துகளில் 4007 ரன்கள் எடுத்துள்ளார். [20 அரைசதங்கள், 274 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்ஸர்கள் அடங்கும்]

* ஐபிஎல்-லில் 4000 ரன்களை கடந்துள்ளார் தோனி. 4000 ரன்களை எட்டும் 7வது வீரர் தோனி ஆகும்.


அதே சமயத்தில், நேற்று நடந்த மற்றும் ஒரு போட்டியில், ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதிக ரன்ரேட் வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லியை வீழ்த்தினாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையில், 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, லீக் சுற்றோடு வெளியேறியது. மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தான். அதில் ஒரு சாதனையும் படைத்துள்ளார்.

அதன்படி, இந்த ஐபிஎல் தொடரில் ஆடிய 14 ஆட்டங்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து வேதனையான சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, 
2008-ல் 404 ரன்கள். 
2009-ல் 362 ரன்கள், 
2010-ல் 404 ரன்கள், 
2011-ல் 372 ரன்கள், 
2012-ல் 433 ரன்கள், 
2013-ல் 538 ரன்கள்,
2014-ல் 390 ரன்கள், 
2015-ல் 482 ரன்கள், 
2016-ல் 489 ரன்கள், 
2017-ல் 333 ரன்கள் எடுத்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DHONI RECORD AND RHOHIT DISAPPOINTMENT RECORD


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->