இது தான் தோனி ஸ்பெஷலோ! அதிரடி ஆட்டம் போட்ட ஜிம்மி! கன நேரத்தில் தூக்கிய தோனி!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5 ஆவது மற்றும் இறுதிப் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாஉட்பட முன்னணி வீரர்கள் அதிர்ச்சி கொடுக்க விஜய் சங்கரும் அம்பத்தி ராயுடுவும் தூக்கி நிறுத்தினர்கள். விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 90 ரன்கள் எடுத்திருந்த போது ராயுடு ஆட்டமிழந்தார். கேதார் ஜாதாவும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ஹர்டிக் பாண்டியா  22 பந்துகளில் 45 ரன்களை இறுதி நேரத்தில் அதிரடியாக குவித்ததால் இந்திய அணி 250 ரன்கள் என்ற இலக்கை கடந்தது.  49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு முஹமது ஷமி அதிர்ச்சி கொடுத்தார். அவருடைய வேகப்பந்துவீச்சில்காலின்  முன்றொ 24 ரன்களிலும், நிக்கோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரோஸ் டெய்லர் நடுவரின் தவறான தீர்ப்பால் பாண்டியா பந்தில் வீழ்ந்தார். 

அதன்பிறகு வில்லியம்சன் லதாம் ஜோடி நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய வந்த நிலையில், அந்த ஜோடியை கேதார்  ஜதாவ் பிரித்தார். 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழக்க, லதாம் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  அதன் பிறகு வந்த ஜிம்மி நீஷம் அதிரடியில் வெளுத்து வாங்கினார். பாண்டியா, புவனேஸ்வர் குமார்,ஷமி  என அனைவரின்  பந்துவீச்சையும் அடித்து தள்ளிய அவர் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி இருந்தார். அப்போது அவருக்கு எதிராக அவுட் கேட்ட கண நேரத்தில் ஏமாந்து போன பேட்ஸ்மேன் நீஷம், கிரிஸ்க்கு வெளியே நிற்க ரன்  அவுட் செய்து அசத்தினார் தோனி. 

இதன்மூலம் நியூசிலாந்தின் போராட்டமானது ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. தற்பொழுது நியூசிலாந்து அணி 42 ஓவர்களில் 201 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 8 ஓவர்களில் 52 ரன்கள் எடுக்க வேண்டும் என நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni presence of mind gain wicket of james neesham


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->