சென்னையில் மும்பையை வீழ்த்துமா சென்னை! தோனி உட்பட மூவர் அணியில் நீக்கம்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்தப் போட்டியிலும் வெற்றி தொடருமா? அல்லது மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் சென்னை அணியை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த தொடரில் மும்பையில்  நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை மும்பை அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணிக்கு பின்னடைவாக கேப்டன் டோனி முதுகு வலியின் காரணமாக களம் இறங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் பேரதிர்ச்சியாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் உடல்நிலை பாதிப்பால் ஆடவில்லை. அதேபோல அயல்நாட்டு வீரராக உள்ள தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிஸ்சிஸ் இந்த போட்டியில் ஆடவில்லை அவர்களுக்கு பதிலாக இதுவரை தொடரில் இடம் பெறாத முரளி விஜயும் துருவ் ஷோரேவும் களம் இறங்கியுள்ளார்கள். இவர்களுடன் மிட்செல்  சாண்ட்னெர் களமிறங்கியுள்ளார்.

மும்பை அணியை பொறுத்தவரையில் அந்த அணியில் புதிதாக ஏவின் லீவிஸ் மற்றும் அங்குல் ராய் இணைக்கப்பட்டுள்ளனர். அணியில் இருந்த மயன் மார்க்கண்டேய, பென் கட்டிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இரண்டு தரப்பிலும் ஏகப்பட்ட மாற்றங்களுடன் களமிறங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni is not available for today match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->