நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.!! தோனி புறக்கணிக்கப்படுகிறாரா? - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால், இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ஆனால், பேட்டிங்கில் சிறு சிறு மாற்றங்கள் நடந்துள்ளது. அதன்படி, இந்த போட்டியில் ஷிகர் தவான் களமிறங்குவர் என்று கூறப்படுகிறது.

கே.எல்.ராகுலுக்கு பதில் அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.

தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் எந்த வரிசையில் களம் இறங்குவர் என்று தெரிவிக்கப்படவில்லை.

அதனோடு, பேட்டிங்கில் கலக்கி வரும் ஹைர்திக் பாண்டியா எந்த வரிசையில் விளையாடுவர் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை

இந்த நிலையில், இந்திய அணியில் முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த முறையும், அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஏற்கனவே, இந்திய அணியில் அதிகப்படியான பேட்ஸ்மேன்கள் உள்ளதாலும், தற்போது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளதாலும், ஏதாவது ஒரு போட்டியில் தோனிக்கு ஓய்வு தரப்படலாம் என்று கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricket Against New Zealand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->