தோனிக்கு இவ்வளவு பெரிய பங்களாவா..? பார்க்க பார்க்க தலை கிறுகிறுக்கும் காட்சிகள்: ஆடம்பரத்தையும் விஞ்சிய அதிசயம்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிரம்மாண்ட வீடு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு அருகில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள புதிய பங்களாவில் வசித்து வருகிறார் தோனி.

இந்த பங்களாவை கட்ட மூன்றாண்டுகள் ஆனதாம். இங்கு ஆடம்பரத்தை விட  பச்சை வண்ணத்தை கொட்டியதுபோல் எங்கு பார்த்தாலும் பசுமை. வீட்டுக்கு உள்ளேயும் சிறு செடிகளை வளர்த்து வருகிறார்.

பார்த்து பார்த்து, ஒவ்வொரு செடி, மரங்களை நட்டு வைத்துள்ளார் தோனி. கைலாஷ்பதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபார்ம் ஹவுசில் நீச்சல் குளம், பல்வேறு விளையாட்டுகள் விளையாட இண்டோர் ஸ்டேடியம், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்த மிகப் பெரிய வசதி என பிரம்மாண்ட வசதிகள் உள்ளன.

அவருடைய வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாய்கள் தூங்குவதற்காக தனியாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தோனி மிகத்தீவிரமான பைக் பிரியர் என்பதால் அவர் பயன்படுத்தும் பலவிதமான பைக்குகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


English Summary

dhoni banglow constructed over 3 years


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal