நேற்றைய ஆட்டத்தில் இறுதி ஓவரின் இறுதி பந்தில் நடந்த திக்.. திக்!! துள்ளி குதித்த பெங்களூரு!! சோகத்தில் மூழ்கிய சென்னை ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal



ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.  39 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், முன்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

2019 ஆவது ஆண்டு ஐபிஎல் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துள்ளது. 

அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களான தீபக் சாகர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் முதல் ஓவரிலேயே அவுட் ஆகி சென்னை ரசிகர்களை ஏமாற்றினர்.

சென்னை அணியின் அம்பத்தி ராயுடு 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்ற தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தும் பலனில்லாமல் சென்னை அணி தோல்வியடைந்தது. 

உமேஷ் யாதவ் ஆட்டத்தின் கடைசி ஓவரினை வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். பின்னர் நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்த தோனி ஐந்தாவது பந்தில் மீண்டும் சிக்ஸரை விளாசினார். 

இறுதியில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தை சாமர்த்தியமாக வீசிய உமேஷ் யாதவ் பந்தினை தோனியால் தொட முடியவில்லை. கீப்பரிடம் செல்வதற்குள் ஒரு ஓட்டம் எடுக்க முயற்சித்தபோது தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி சூப்பர் ஓவரையும் மிஸ் செய்து தோல்வியை சந்தித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk loss in last ball


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->