காமன்வெல்த் போட்டிகளில் இணையும் கிரிக்கெட்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், மீண்டும் காமன்வெல்த் போட்டிகள் வரும் 2022 ஆம் ஆண்டு நடத்தப்படுகிறது. அந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பெர்மிங்ஹாம் நகரில் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் டி20 கிரிக்கெட்டையும் சேர்க்க காமன்வெல்த் போட்டி குழுவிடம், ஐசிசி அறிவுறுத்தும் என ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பார்வையாளர்களை கொண்ட காமன்வெல்த் போட்டிகளில், பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்தால் இன்னும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 1988 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியும் இருந்தது. அப்போது நடைபெற்ற போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி தங்க பதக்கமும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முறையே வெள்ளி, வெண்கலம் பரிசு பெற்றது.  பின்னர் கிரிக்கெட் நீக்கம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricket to join Commonwealth Games Enthusiastic fans!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->