இந்த உலகக்கோப்பையுடன் விடைபெறுகிறேன்.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிரடி மன்னன்.!! அதிர்ச்சியில் உறைந்த இந்திய ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


வரும் உலக கோப்பைக்கு பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெய்ல் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் அவருக்கென இருக்கும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரை பற்றியும், அவர் கிரிக்கட் உலகில் செய்த சாதனைகள் பற்றிய சிறிய தொகுப்பை இங்கு காண்போம்.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் முழு பெயர் கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்.

* கடந்த 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், தனது முதல் சர்வதேச ஆட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தொடங்கினார். 

* 2000ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அறிமுகமானார்.

* அதன்பின் வெஸ்ட்இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியாத, முக்கிய ஆட்டக்காரராக மாறினார்.

* இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 284 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

* இதுவரை 23 சதங்களுடன் 9 ஆயிரத்து 727 ரன்கள் குவித்துள்ளார். 

* பந்து வீச்சு மூலம் 165 விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.

* ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 275 சிக்ஸர்களுடன் அஃப்ரிடிக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார்.

* 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய கெய்ல் 215 ரன்களை குவித்தார். 

* மேலும், உலக கோப்பை தொடரில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் கெய்ல்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார் கெய்ல். 

* இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 மணி நேரம் நின்று விளையாடி 333 ரன்கள் குவித்தார்.

* அந்த ஆண்டு 2010 ஆம் ஆண்டு முதல்,  கெயில் 333 என்ற எண்ணைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் உடை அணிகிறார்.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 79 பந்துகளில் சதமடித்து

* 56 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 1607 ரன்கள் குவித்துள்ளார் கிறிஸ் கெய்ல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHRIS GAYLE RETIREMENT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->