T20 போட்டியில் நம்ப முடியாத சாதனை : ரன்கள் கொடுக்காமலே 10 விக்கெட்டுகளை எடுத்த சிறுவன்..!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற T20 போட்டியில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் 15 வயது சிறுவன் எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ளூர் பிரமுகர் ஒருவர் தன்னுடைய தாத்தாவின் நினைவில் T20 போட்டி நடத்தினார். அதில், திசெ கிரிக்கெட் அகாடமி (டி.சி.ஏ) மற்றும் பெர்ல் அகாடமி (பிஏ) ஆகிய அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது.

அதல் டாஸ் வென்ற பிஏ அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய டிசிஏ அணி, 20 ஓவர்களில் 156 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பிஏ அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

டிசிஏ அணியின் இந்த வெற்றிக்கு காரணம், ஆகாஷ் சௌத்ரி என்ற 15 வயது சிறுவன் தான். அவர் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

முதல் 3 ஓவர்களிலும் ரன்கள் எதுவும் கொடுக்காமல் தலா 2 விக்கெட்டுகளையும், 4-வது ஓவரிலும் ரன் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் கூறுகையில், T20 போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுப்பது சாத்தயமாகும். ஆனால் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் எடுப்பது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child takes 10 wickets for zero runs in T20


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->