கடைசி பந்தில் போராடி சென்னை வெற்றி! வாணவேடிக்கை காட்டிய வில்லியம்சன்! - Seithipunal
Seithipunal


11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கிய  20-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.

Image result for deepak chahar csk

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது பந்து தாக்கி முழங்கையில் காயம் அடைந்து வெளியேறிய ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டூ பிலிஸிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.  

முதலில் ஆடிய சென்னை அணி பயங்கரமாக தடுமாறியது. ஹைதராபாத் அண்ணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் rangal எடுக்கவே தடுமாற்றம் கண்டனர். பவர்பிளே ஓவர்களில் பந்துகள் பவுண்டரியை மூன்று முறை மட்டுமே எட்டியது. வாட்சன், டூபிலிசிஸ் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.   பின்னர் களமிறங்கிய ரெய்னா, ராயுடு ஆட்டத்தில் அனல் பறந்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் ராயுடு 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோணி 25 ரன்களுடனும், ரெய்னா 54  ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  20 ஓவர் முடிவில்  சென்னை அணி 182/3 ரன்கள் எடுத்துள்ளது. 

Image result for deepak chahar csk

பின்னர் விளையாடிய ஹைட்ரபாத் அணி 20 ஓவர் முடிவில்   178/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டம் கடைசி பந்து வரை வந்து ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியது. இறுதி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai won the match after last ball thrilling


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->