தோனிக்கு முன் கேப்டனாக வேண்டியது தினேஷ் கார்த்திக்கா..!? - Seithipunal
Seithipunal


இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வென்று நிதாஸ் கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியின் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 8 பந்துகளில் 3 சிக்ஸ், இரண்டு பவுண்டரி உட்பட மொத்தம் 29 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.இந்த ஒரே போட்டியில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாரக  மாறியுள்ளார்.

Related image

இந்திய அணியில் டோணி, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஒன்றாகவே இணைந்தனர்.தினேஷ் கார்த்திக் 2004 செப்டம்பர் மாதமும்  அதே ஆண்டில் டிசம்பர் மாதம் டோணியும் அணியில் சேர்ந்தனர்.இந்நிலையில் டோணிக்கு கிடைத்த பல நல்ல வாய்ப்புகள் தினேஷுக்கு கிட்டவில்லை என்றே சொல்லலாம்.இந்திய அணிக்கான கேப்டன் வாய்ப்பு டோணிக்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு தான் இருந்தது. இந்திய அணியில் கங்குலி, டிராவிட் இன்றி தவித்தபோது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் ஆலோசனை கூறியிருந்தார்.இந்நிலையில் தான் கேப்டன் வாய்ப்பு டோணிக்கு கைகூடியது.

Image result for dhoni and dinesh karthik

முத்தரப்பு தொடரின் கடைசி போட்டிக்கு பின் டோணி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்ற விவாதம் பெரும்பலவரிடம் எழுந்தது.அதற்கு தினேஷ் கார்த்திக்  பதிலளிக்கையில்''எப்போதும் எங்களில் டோணிதான் பெரியவர். என்னை தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கவே இயலாது'' என்றுள்ளார்.மேலும் அவர் ''நான் படித்த பள்ளியில் அவர்தான் டாப், அங்கு அவர்தான் ஹெட் மாஸ்டரும்கூட ,அவர் என்னைவிட அதிக அனுபவம் கொண்டவர். கடைசி கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்'' என கூறிஉள்ளார்.Image result for dhoni and dinesh karthik


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

before dhoni, dinesh karthik is in the Indian captain selection list


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->