கோலியைப் பற்றி நான் பெருமையாக தான் கூறினேன்.! அவரை குறைத்து மதிப்பிட்டு கூறவில்லை.!! பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் விளக்கம்!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின், வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில், இந்திய கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்க விட மாட்டோம், என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

கம்மின்ஸின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து, கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ, கோலி மிகச்சிறந்த வீரர் அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. மேலும் அவரை போன்ற ரன் வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டிப்பாக  சதமடிப்பார் என கூறியிருந்தார்.

மேலும், பேட் கம்மின்ஸ் கோலியை சதமடிக்க விடமாட்டோம் என  கூறிய அவரது, கூற்றை மறுத்து அந்த அணியின் முன்னாள் நட்சத்திர பவுலரே கருத்து தெரிவித்திருந்தது, வைரலாக பரவியது. இதையடுத்து கோலி தொடர்பாக கூறிய கருத்து குறித்து பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, பேசியுள்ள பாட் கம்மின்ஸ், இந்திய அணிக்கு கோலி மிகவும் முக்கியமான வீரர். அவர் சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். எனவே அவரை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் அதனால் அவரை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பது எனது விருப்பம். அந்த வகையில், கோலியை சதமடிக்க விடமாட்டோம்; விரைவில் வீழ்த்துவோம் என்று அவரை பெருமையாக கூறினேனே தவிர, குறைத்து மதிப்பிட்டு கூறவில்லை என விளக்கமளித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australiyan fast bowler talk about kohli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->