டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு! யாரும் எதிர்பாராத கோலியின் முடிவு! அணியில் ஒரே மாற்றம்! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியிலும் கடந்த போட்டியை போலவே டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். கோலி இரண்டாவது முறையாக டாஸ் இழந்துள்ளார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியின் போதும் டாஸ் இழந்ததில் கோலி அதிருப்தி அடைந்தார். 

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் இன்று அணியுடன் இணைந்து உள்ளார். இருப்பினும் இரண்டாவது போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை. சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணியில் ஒரே ஒரு மற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கலீல் அஹமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளார். இது அவருக்கு முதல் ஒருநாள் போட்டியாகும். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதே வெற்றி கூட்டணியே மாற்றமின்றி களமிறங்குகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia won the toss and elected to bat first in Adelaide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->